search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி: தடகளத்திற்கு 23 பேர் தேர்வு
    X

    ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி: தடகளத்திற்கு 23 பேர் தேர்வு

    இதுவரை இல்லாத அளவுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். தடகளத்திற்கு 23 பேர் தேர்வு ஆகி உள்ளனர்.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடக்கிறது.

    பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி பெற்று உள்ளனர். எந்த ஒரு ஒலிம்பிக் போட்டிக்கும் இவ்வளவு அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றது கிடையாது. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 83 பேர் பங்கேற்றதே அதிகமானதாக இருந்தது.

    இதை முறியடித்து இந்த ஒலிம்பிக் போட்டிக்கு 103 பேர் இதுவரை தகுதி பெற்று உள்ளனர். இதில் 56 ஆண்கள், 47 பெண்கள். 57 வகையான விளையாட்டு பிரிவில் இந்தியா பங்கேற்கிறது.

    தடகளத்தில் 23 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 11 பேர் பெண்கள். 15 பிரிவுகளில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஆக்கியில் இரு அணிகளும் (ஆண்கள், பெண்கள்) கலந்து கொள்கின்றன.

    100-க்கும் மேற்பட்டோர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதால் இந்த முறை கூடுதலான பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×