search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.சி.பி., குஜராத், ஐதாராபாத்: ஐ.பி.எல். சாம்பியன் பட்டியலில் இணையப்போவது யார்?
    X

    ஆர்.சி.பி., குஜராத், ஐதாராபாத்: ஐ.பி.எல். சாம்பியன் பட்டியலில் இணையப்போவது யார்?

    ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பில் பெங்களூர், குஜராத் மற்றும் ஐதராபாத் ஆகிய மூன்று அணிகள் உள்ளன. இதில் எந்த அணி வென்றாலும் அவர்களுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும்.
    உலக அளவில் நடைபெறும் தொழில்முறை டி20 கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் என்று கூறலாம்.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மிகச்சிறப்பான வகையில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. அறிமுக தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று முதல் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போ்டடியில் சிறப்பாக விளையாடிய யூசுப் பதான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அனில் கும்ப்ளே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    2010 மற்றும் 2011-ல் முறையே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    2012-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிட் வெற்றி படைக்கும் என நினைக்கையில், சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

    2013-ல் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    2014-ல் கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    கடந்த வருடம் (2015) சென்னையை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதுவரை நடைபெற்று முடிந்த 8 தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் தலா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

    இந்த வருடம் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாடவில்லை. டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வேறொரு உரிமையாளர் கைப்பற்றி அந்த அணிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    மற்ற இரண்டு அணிகளான மும்பை, கொல்கத்தா ஆகியவை போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன. தற்போது பெங்களூர், ஐதராபாத் மற்றும் குஜராத் ஆகிய அணிகள்தான் களத்தில் உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணி யார் என்பது தெரிந்து விடும். இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி, தனது சொந்த மைதானமான பெங்களூரில் இறுதிப்போட்டியை சந்திப்பதால் அந்த அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 
    Next Story
    ×