search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனே அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு: காயத்தால் மிட்செல் மார்ஷ் விலகல்
    X

    புனே அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு: காயத்தால் மிட்செல் மார்ஷ் விலகல்

    ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய 24 வயதான ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகினார்.
    புனே, மே.2-

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா) ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் காயம் காரணமாக விலகினர்.

    இந்த நிலையில் புனே அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக 24 வயதான ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்சும் (ஆஸ்திரேலியா) எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது வயிற்றின் இடதுபகுதியில் வலியால் அவதிப்பட்டார்.

    கடந்த ஆட்டத்திற்கு ஓய்வு அளித்த போதிலும் வலி குணமாகவில்லை. ‘ஸ்கேன்’ பரிசோதனையில் இடது பக்கவாட்டில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக தாயகம் திரும்பும் அவருக்கு அங்கு காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. 3 ஐ.பி.எல். ஆட்டங்களில் ஆடிய அவர் 4 விக்கெட்டுகளும் 7 ரன்களும் எடுத்துள்ளார்.

    Next Story
    ×