search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியாமி ஓபன் டென்னிஸ்: 6-வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
    X

    மியாமி ஓபன் டென்னிஸ்: 6-வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

    Miami Open Tennis 6th time champion Novak Djokovic
    மியாமி, ஏப்.5-

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 6-ம் நிலை வீரர் நிஷிகோரியை (ஜப்பான்) சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அத்துடன் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியையும் ருசித்தார். இதன் மூலம் 28-வது ஏ.டி.பி. மாஸ்டர் பட்டத்தை வென்ற ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (27 பட்டம்) சாதனையை முறியடித்தார்.

    அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த ஆந்த்ரே அகாசி 6 முறை மியாமி ஓபன் பட்டத்தை வென்ற சாதனையை சமன் செய்தார்.
    Next Story
    ×