search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?: கிரிக்கெட் வாரியம் விருப்பம்
    X

    இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?: கிரிக்கெட் வாரியம் விருப்பம்

    இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் 2011 ஆண்டு நியமிக்கப்பட்டார். ஜிம்பாப்வேயை சேர்ந்த அவரது பதவி காலம் 2015–ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பையோடு முடிவடைந்தது.

    ஆனால் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் உள்ளது. அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்ட ரவிசாஸ்திரி கூடுதலாக கவனித்து வந்தார்.

    பயிற்சியாளர் இல்லாமலேயே போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த 20 ஓவர் உலக கோப்பையோடு அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி ஒப்பந்தம் முடிந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளர் நியமிக்கும் பணியில் கிரிக்கெட் வாரியம் இறங்கி உள்ளது.

    புதிய பயிற்சியாளரை கண்டறியும் பணி தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லட்சுமண் ஆகியோர் கொண்ட ஆலோசனை கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கமிட்டி வருகிற 5–ந் தேதி கூடி பயிற்சியாளர் பற்றி விவாதிக்கிறது. இதில் ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக நியமிக்க பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ராகுல் டிராவிட்டை நியமிக்கவும் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இதை டிராவிட் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் நியமிக்கப்பட்டால் 2019–ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வரை பதவி காலம் இருக்கும்.
    Next Story
    ×