iFLICKS தொடர்புக்கு: 8754422764

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து: ராஜ்நாத் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் சொத்து பட்டியல் தாக்கல் இல்லை

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் சொத்து பட்டியலை தாக்கல் செய்யவில்லை.

செப்டம்பர் 23, 2017 04:37

தலைநகரில் உக்ரைன் நாட்டு தூதரின் செல்போன் திருட்டு

டெல்லி செங்கோட்டையை சுற்றிப்பார்க்கச் சென்ற உக்ரைன் நாட்டு தூதர் ஈகோர் போலிகாவின் செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23, 2017 03:23

ஜூனியர்களுக்கு ராக்கிங் தொந்தரவு: பல்கலை.யில் இருந்து 6 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்

ஆந்திர மாநிலம் நஷ்வித்தில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு ராக்கிங் தொந்தரவு அளித்ததாக 6 மாணவர்கள் நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 23, 2017 02:14

‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் காலமானார்

ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் (91) உடல்நலக்குறைவால் காலமானார்.

செப்டம்பர் 22, 2017 23:54

அரியானாவில் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

அரியானா மாநிலத்தில் ரேவாரி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அப்பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 22, 2017 22:21

மனிதன் உடல் 400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடியது: யோகா குரு ராம்தேவ்

மனிதன் உடல் 400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும், வாழ்க்கை முறையை நாம் மாற்றிக்கொண்டதன் விளைவாக வாழ்நாள் குறைவதாக யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.

செப்டம்பர் 22, 2017 21:36

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக். 6-ந்தேதி விசாரணை நடைபெறும்: தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 22, 2017 20:42

காங்கிரஸ் கட்சி தலைவராக நவம்பரில் பொறுப்பேற்கிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக வரும் நவம்பர் மாதம் ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என டெல்லி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22, 2017 19:52

திருவனந்தபுரம் அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை

திருவனந்தபுரம் அருகே காதலித்து ஏமாற்றியதால் காதலனை லாட்ஜுக்கு வரவழைத்து மர்ம உறுப்பை துண்டித்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செப்டம்பர் 22, 2017 18:33

தெரு நாய்கள் கடித்ததில் 4 வயது சிறுவன் பரிதாப பலி

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூரில் தெரு நாய்கள் கடித்ததில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 22, 2017 18:14

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தார் - புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி வந்தடைந்தார். அங்கு புதிதாக தொடங்கப்பட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 22, 2017 18:08

கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது ஏன்? - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. இன்று சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளித்தது.

செப்டம்பர் 22, 2017 18:05

அரியானா மாநிலத்திற்கு 119 கோடி ரூபாய் கடன் வழங்கியது நபார்டு வங்கி

அரியானா அரசிற்கு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கி (நபார்டு) 119 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.

செப்டம்பர் 22, 2017 17:51

பெங்களூரில் கடத்தப்பட்ட வருமானத்துறை அதிகாரி மகன் கொலை - 4 பேர் கைது

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரி மகன் பணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 22, 2017 16:36

எடியூரப்பா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

கர்நாடக மாநில பா.ஜ.க தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீதான முறைகேடு வழக்கை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

செப்டம்பர் 22, 2017 16:15

ஹவாலா பணப் பரிமாற்ற வழக்கு: பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஹவாலா பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22, 2017 16:11

ஜம்மு-காஷ்மீரில் முதல் இ-கோர்ட்: தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

ஜம்மு-காஷ்மீரில் முதல் இ-கோர்ட் வசதியை ஸ்ரீநகர் கோர்ட்டில் அம்மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி பதார் டுரேஸ் தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 22, 2017 14:43

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நீதிமன்றம் சொன்னால் மட்டுமே இழப்பீடு: அரியானா முதல் மந்திரி பேட்டி

தேரா சச்சா சவுதா தலைவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்ற கலவரத்தின்போது, போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நீதிமன்றம் சொன்னால்தான் இழப்பீடு வழங்கப்படும் என அரியானா முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 22, 2017 14:05

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் 5 இடங்களில் பதுங்கல்: பிடிபட்ட தம்பி தகவல்

மும்பை குண்டு வெடிப்பு தொடர்புடைய தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் 5 இடங்களில் பதுங்கி உள்ளதாக அவரது தம்பி போலீசில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 22, 2017 12:53

திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்: 27-ந்தேதி கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. 27-ந்தேதி கருட சேவை நடக்க உள்ளது.

செப்டம்பர் 22, 2017 12:52

கபினி அணையில் சமர்ப்பண பூஜை செய்த முதல்-மந்திரி சித்தராமையா

முதல்-அமைச்சர் சித்தராமையா கபினி அணையில் நேற்று சமர்ப்பண பூஜை (பாகிணி) பூஜை செய்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் மற்றும் விவசாய பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

செப்டம்பர் 22, 2017 12:36

5

ஆசிரியரின் தேர்வுகள்...