search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளியா?, நிரபராதியா?: லாலுவுக்கு எதிரான மூன்றாவது ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு
    X

    குற்றவாளியா?, நிரபராதியா?: லாலுவுக்கு எதிரான மூன்றாவது ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு

    பீகாரில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழலில் சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.35.62 கோடி பணம் எடுத்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.
    ராஞ்சி:

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

    இதில், முதல் வழக்கில் 30-9-2013 அன்று லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இரண்டரை மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

    இரண்டாவது வழக்கில் டியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து கால்நடை தீவனம் வாங்குவதற்காக ரூ.89.27 லட்சம் பணம் சுரண்டப்பட்ட வழக்கை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார். மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

    இன்னொரு வழக்கில் 30-9-2013 அன்று லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இரண்டரை மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதுதவிர, அவருக்கு எதிரான ரூ.89.27 லட்சம் ஊழல் வழக்கை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.35.62 கோடி பணம் எடுத்த வழக்கு, டோரன்டா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி பணம் எடுத்த வழக்கு, தும்கா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடி பணம் எடுத்த வழக்கு ஆகிய மூன்று வழக்குகளில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இவற்றில், சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.35.62 கோடி பணம் எடுத்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்தது. இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு ஜனவரி 24-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என இவ்வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் சமீபத்தில் அறிவித்தார்.

    நாளைய தீர்ப்பு லாலுவுக்கு சாதகமாக அமையலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில் அவருக்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்தரப்பினர் கருதுகின்றனர்.

    எது எப்படி இருந்தாலும் நாளைய தீர்ப்புக்கு பின்னரும் மேலும் இரு வழக்குகளின் தீர்ப்புகளை லாலு எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
    Next Story
    ×