search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி நீக்கத்தை எதிர்த்து 20 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
    X

    தகுதி நீக்கத்தை எதிர்த்து 20 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி ஐகோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்கு முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு உதவுவதற்காக 20 எம்.எல்.ஏ.க் கள் ‘பார்லிமெண்ட் செக்ரட்டரி’ எனப்படும் கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள பதவியில் நியமிக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி, தேர்தல் கமி‌ஷனுக்கு புகார் அனுப்பப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தி ஆதாயம் தரும் பதவியிலிருந்த 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று சமீபத்தில் பரிந்துரை செய்து இருந்தது. இதைதொடர்ந்து ஆம்ஆத்மியின் 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி ஐகோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

    ஏற்கனவே தாக்கல் செய்து இருந்த மனுவை அவர்கள் திரும்பபெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×