search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் கட்சிகளுக்கு ரூ.2 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது - வருமான வரித்துறை எச்சரிக்கை
    X

    அரசியல் கட்சிகளுக்கு ரூ.2 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது - வருமான வரித்துறை எச்சரிக்கை

    அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
    புதுடெல்லி:

    தேர்தலின் போது அரசியல் கட்சிகள் சட்ட விரோதமான பணபரிமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் வருமான வரித்துறையினர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தின் படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும் குறிப்பிட்ட சில பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கிடைக்கும் தேர்தல் நன்கொடைக்கான நிதிப் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் வங்கிகள் வழியாக, வெளிப்படையாக நன்கொடை அளிக்க முடியும். பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த தொகை குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை தவிர்க்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் தலா 10 நாள்களுக்கு மட்டுமே இந்தப் பத்திரங்கள் கிடைக்கும்.

    இந்நிலையில், இத்திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×