search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றனர்
    X

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றனர்

    தேர்தல் கமிஷனின் தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று திரும்பப்பெற்றனர். #OfficeOfProfit #AAPMLAsDisqualified
    புதுடெல்லி:

    இரட்டை ஆதாயப் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ததை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷன் முடிவுக்கு எதிராக உடனடியாக கடந்த 19-ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்தது. 

    அக்கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஆனால் தேர்தல் கமிஷனின் முடிவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. 

    இதற்கிடையில், தேர்தல் கமிஷனின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கையொப்பமிட்டார். இதனால், அந்த 20 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனது.

    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ரேகா பாளி முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பரிந்துரைக்கு ஜனாதிபதி ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டார் என்பதை குறிப்பிட்டு பழைய மனுக்களை திரும்பபெறுவதாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார். #tamilnews  #OfficeOfProfit #AAPMLAsDisqualified
    Next Story
    ×