search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.: சானிட்டரி நாப்கின் தொடர்பான வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
    X

    ஜி.எஸ்.டி.: சானிட்டரி நாப்கின் தொடர்பான வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை

    சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கோரும் வழக்குகளை பல்வேறு நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #GST #SC
    புதுடெல்லி:

    சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து இருந்து விலக்கு அளிக்கக் கோரி டெல்லி மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

    அத்துடன், நாப்கின் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் அல்லது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தது.

    இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் 4 வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பி, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews

    Next Story
    ×