search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து பயணம்
    X

    உலக பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து பயணம்

    4 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக சுவிட்சர்லாந்து செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸ் நகரில் நடக்க உள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் உரையாற்ற உள்ளார். #PMModi #World Economic2018

    புதுடெல்லி:

    உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    48-வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

    நாளைய தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரேசாமே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஒருங்கிணைந்த எதிர்கால நலன்களை உருவாக்குவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

    உலக பொருளாதார மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் பங்கேற்கிறார். கடைசியாக 1997-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவே கவுடா இந்த மாநாட் டில் பங்கேற்று இருந்தார். #PMModi #World Economic2018  #tamilnews

    Next Story
    ×