search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு: இன்று 10 ரெயில்கள் ரத்து
    X

    டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு: இன்று 10 ரெயில்கள் ரத்து

    டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரெயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #DelhiFog
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பொழுதுவிடிந்து வெகுநேரம் ஆகியும் சாலைகள் தெரியாத அளவுக்கு பனிப்போர்வை மூடியதுபோல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக காலை வேளைகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுகிறது.

    டெல்லியில் இன்றும் பனிப்பொழிவு அதிகம் இருந்தது. இதனால் டெல்லியில் இருந்து இயக்கப்படும் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 22 ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. 3 ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக பயணித்தனர். #DelhiFog  #tamilnews
    Next Story
    ×