search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘மோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு’ - ப.சிதம்பரம் கண்டனம்
    X

    ‘மோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு’ - ப.சிதம்பரம் கண்டனம்

    பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே அதிக அளவில் உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு அவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். #Chidambaram #PetrolDieselPrice
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே அதிக அளவில் உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு அவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள அவர், பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதித்து வீணான செலவுகளை செய்து வரும் மோடி அரசு நுகர்வோருக்கு எதிரான அரசு என்று குற்றம்சாட்டி இருப்பதோடு, பெட்ரோலிய பொருட்களை சரக்கு சேவை வரியின் கீழ் அரசு கொண்டு வராதது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (எச்.பி.சி.எல்.) உள்ள அரசின் பங்குகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) வாங்கி இருப்பது, நிதிப்பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு கூறி இருக்கிறார்.  #Chidambaram #PetrolDieselPrice #tamilnews
    Next Story
    ×