search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா: மூன்றாவது நாளாக தொடரும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்
    X

    கோவா: மூன்றாவது நாளாக தொடரும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்

    கோவாவில் மூன்றாவது நாளாக டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
    பனாஜி:

    கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவி வகித்து வருகிறார்.
     
    கோவாவில் உள்ள டாக்சிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த கருவிகளை பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பொருத்த வேண்டும் என முதல் மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும், எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்சி டிரைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்சிகள் ஓடாததால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

    இந்நிலையில், டாக்சி டிரைவர்களின் வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. ஆசாத் மைதானத்தில் கூடியிருந்த 1000க்கு மேற்பட்டோர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதுதொடர்பாக, டாக்சி டிரைவர் சங்கத்தினர் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரையில் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளன்ர். டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா, ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #touristtaxioperators #strike #tamilnews
    Next Story
    ×