search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏப்ரல் மாதத்துக்குள் ஆன்லைன் லாட்டரியை கொண்டுவர மகாராஷ்டிர அரசு திட்டம்
    X

    ஏப்ரல் மாதத்துக்குள் ஆன்லைன் லாட்டரியை கொண்டுவர மகாராஷ்டிர அரசு திட்டம்

    மாநிலத்தின் வருமானத்தை பெருக்க ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
    மும்பை:

    மாநிலத்தின் வருமானத்தை பெருக்க ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில திட்டக்குழு முதன்மை செயலாளர் விஜய்குமார் கவுதம், கேரள அரசு ஆன்லைன் லாட்டரி மூலம் ஏராளமான பணம் சம்பாதித்து வருவதால் மகாராஷ்டிராவிலும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இதை அறிமுகப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    தற்போது, காகிதத்தில் அச்சடித்த லாட்டரி சீட்டுகளின் மூலம் 132 கோடி ரூபாய் மாநிலத்துக்கு வருவாயாக கிடைப்பதாக குறிப்பிட்ட மற்றொரு நிதித்துறை அதிகாரி, இவற்றில் சுமார் 125 கோடி ரூபாய் மகாராஷ்டிராவில் விற்பனையாகும் இதர மாநில லாட்டரி சீட்டுகளின் மூலம் கிடைப்பதாக குறிப்பிட்டார். மாநில அரசுக்கு சொந்தமான லாட்டரி மூலம் வெறும் 7 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக கிடைக்கிறது.

    ஆனால், சிறிய மாநிலமான கேரளா ஆன்லைன் லாட்டரி மூலம் ஆண்டொன்றுக்கு 1300 கோடி ரூபாய் அளவுக்கு சம்பாதிக்கின்றது. இதேபோல் வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஆன்லைன் லாட்டரி மூலம் நல்ல வருமானம் கிடைக்கின்றது. மற்ற மாநிலங்கள் நடத்தும் ஆன்லைன் லாட்டரிகள் மும்பையில் அதிக அளவில் விற்பனையாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

    லாட்டரி சீட்டு விற்பனை அடியோடு ஒழிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் நீர் பகிர்மானம், பாலம் கட்டுதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு தேவையான நிதியாதாரத்தை பெருக்க அவ்வப்போது ஆன்லைன் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×