search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுச்சுவர். (உள்படம்: நேற்று பலியான வீரர் கே.சி ராய்)
    X
    பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுச்சுவர். (உள்படம்: நேற்று பலியான வீரர் கே.சி ராய்)

    எல்லையில் பாக். படைகள் தாக்குதலில் நான்கு நாட்களில் 5 வீரர்கள் உள்பட 11 பேர் பலி

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த நான்கு தினங்களாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதில் 5 வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதி மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியான ஜம்மு, காதுவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த வியாழன் முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

    துப்பாக்கிகள், சிறிய ரக மோட்டார் குண்டுகளால் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்கிய அவர்கள், குடியிருப்பு பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை. எதிரிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், பாகிஸ்தான் தாக்குதலில் 6 பொதுமக்கள், 3 ராணுவ வீரர்கள், 2 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு, பூஞ்சில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிப்பாய் சி.கே ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    நேற்றிரவு முதல் தற்போது வரை எல்லையில் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×