search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசம்: ரகோகர் தொகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
    X

    மத்திய பிரதேசம்: ரகோகர் தொகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

    மத்திய பிரதேசம் மாநிலம் ரகோகர் தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தின் குனா மாவட்டத்தில் உள்ள ரகோகர் தொகுதியின் 24 வார்டுகளுக்கு கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ரகோகர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இறுதியில், மொத்தம் உள்ள 24 வார்டுகளில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பா.ஜ.க. மீதமுள்ள 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×