search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் இன்றும் அத்துமீறல் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 2 பேர் பலி
    X

    எல்லையில் இன்றும் அத்துமீறல் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 2 பேர் பலி

    காஷ்மீரில் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். சார்குர்தா என்ற இடத்தில் பெண்ணும், ஆர்.எஸ். புராவின் கோரோ தோனா என்ற இடத்தில் ஒருவரும் பலியானார்கள்.

    ஜம்மு:

    காஷ்மீரில் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. நேற்று நடந்த தாக்குதலில் 17 வயது இளம் பெண்ணும், எல்லை பாதுகாப்புபடை வீரர் ஒருவரும் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.

    இன்று பாகிஸ்தான் படைகள் காஷ்மீரில் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டத்தை யொட்டியுள்ள எல்லைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியது.

    ஆர்.எஸ்.புரா, ஆர்னியா, ராம்கர் ஆகிய இடங்களில் துப்பாக்கியால் சுட்டும், மோட்டார் ரக குண்டுகளை வீசியும் பலமான தாக்குதலில் ஈடுபட்டது. இங்கு 40-க்கும் மேற்பட்ட எல்லை கிராமங்கள் உள்ளன.

    இங்கு பாகிஸ்தான் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இருவருமே பொதுமக்கள் ஆவார்கள். சார்குர்தா என்ற இடத்தில் பெண்ணும், ஆர்.எஸ். புராவின் கோரோ தோனா என்ற இடத்தில் ஒருவரும் பலியானார்கள்.

    மேலும் சார்குர்தா கிராமத்தில் ஒருவரும், ராம்நகரில் 2 பேரும் காயம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் வசித்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

    எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் கே.கே. சர்மா நேற்று ஜம்மு சென்று பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த வீரர் சுரேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #tamilnews

    Next Story
    ×