search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் அப்பாவு தொடர்ந்த வழக்கு 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    சுப்ரீம் கோர்ட்டில் அப்பாவு தொடர்ந்த வழக்கு 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பாவு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை. தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி நடந்துள்ளது. இந்த வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் கோரப்பட்டது.



    இந்த வாக்குகள் முறையாக எண்ணப்பட்டு இருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால் ஐகோர்ட்டு இந்த அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், சஞ்ஜய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணை துவங்கியதும் நீதிபதிகள் இந்த வழக்கை விரிவாக விசாரிக்கும் வகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர். tamilnews
    Next Story
    ×