search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு ஓட்டு விவகாரத்தில் இந்தியாவுடனான உறவு முறிந்து விடாது: இஸ்ரேல் பிரதமர் பேட்டி
    X

    ஒரு ஓட்டு விவகாரத்தில் இந்தியாவுடனான உறவு முறிந்து விடாது: இஸ்ரேல் பிரதமர் பேட்டி

    ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்த நிலையில் டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஒரு ஓட்டு விவகாரத்தில் இந்தியாவுடனான உறவு முறிந்து விடாது என குறிப்பிட்டுள்ளார். #IsraelPM #India
    புதுடெல்லி:

    கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகம் திறக்கப்போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரித்தும் அறிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த முடிவுக்கு பாலஸ்தீனம், அராபிய நாடுகள் மற்றும் ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் உள்ள பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் துருக்கி கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் இன்று சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்ற பெஞ்சமின் நேதன்யாகு அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.



    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தநாள் ஒரு புதுயுகத்துக்கான விடியல் என்று குறிப்பிட்டார். இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புவாய்ந்த வருகைக்கு பின்னர் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு எனது இந்திய வருகையின் மூலம் தொடர்கிறது. 

    ஐக்கிய நாடுகள் சபையில் ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களித்ததில் எங்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால், ஒரேயொரு ஓட்டின் மூலம் பொது கருத்தை மாற்றிவிட முடியாது, இதர துறைகளில் உள்ள உறவுகளை முன்னெடுத்து செல்வதை தடுத்துவிட முடியாது என்பதற்கு எனது இந்திய வருகை வாக்குமூலமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.  #IsraelPM #India #tamilnews
    Next Story
    ×