search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100-வது செயற்கைக்கோள் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல் வாழ்த்து
    X

    100-வது செயற்கைக்கோள் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல் வாழ்த்து

    இந்தியாவின் 100-வது செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2 சுமார் 510 கி.மீ. உயரத்தில் அதன் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் இது புதிய சாதனையாக, புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

    கார்ட்டோசாட்-2 செற்கைக்கோள் இயற்கை வளங்களை நுட்பமாக ஆய்வு செய்யும். இதற்காக அந்த செயற்கைக் கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொலையுணர்வு கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர கடல் வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகர்ப்புற உள் கட்டமைப்பு பணிகளுக்கும் இந்த செயற்கைக்கோள் தரும் தகவல்கள் உதவியாக இருக்கும். அதோடு இந்திய ராணுவத்துக்கும் கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க உள்ளது.

    இந்த திட்டம் வெற்றியடைந்தையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 'இஸ்ரோ வரலாற்றில் மீண்டும் சாதனைப்படைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். அவர்களின் கடின முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம்' என ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.

    Next Story
    ×