search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.எல்.வி. சி-40 திட்டம் வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
    X

    பி.எஸ்.எல்.வி. சி-40 திட்டம் வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

    பி.எஸ்.எல்.வி. சி-40 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ISRO #PSLVC40 #RamnathGovind #Modi

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.

    இந்நிலையில் தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோளான ‘கார்ட்டோசாட்-2’ உள்பட 31 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் இன்று காலை 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு பின்னர் நிலைநிறுத்தப்பட்டது.  இன்று செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோள் ஆகும்.

    இந்த திட்டம் வெற்றியடைந்தையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 மற்றும் இரண்டு இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் ஆறு நட்பு நாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன் இணைந்து விண்ணில் செலுத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தருவதாகும். இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துக்கள். இது நம் நாட்டிற்கு ஒரு மைல்கல் போன்றதாகும்.



    பிரதமர் மோடி பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 
    இந்த புத்தாண்டில் நமது வெற்றியானது விண்வெளி தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் மூலம் நாட்டின் குடிமகன்கள், விவசாயிகள், மீனவர்கள் முதலானோருக்கு நன்மைகளை கொண்டு வரும். இந்த 100-வது செயற்கைக்கோள் வெற்றியானது, இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் பிரகாசமான எதிர்காலத்தையும், அதனால் நிகழக்கூடிய மகிமை வாய்ந்த சாதனைகளையும் குறிக்கிறது. இந்தியாவின் வெற்றிகளின் நன்மைகள் நம் நண்பர்களுக்கும் கிடைக்கும்! 31 செயற்கைக்கோள்களில், 6 இதர நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளனர். #ISRO #PSLVC40 #RamnathGovind #Modi #tamilnews
    Next Story
    ×