search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத நடைபாதை வாசிகளின் நிலை என்ன? சுப்ரீம் கோர்ட் கேள்வி
    X

    முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத நடைபாதை வாசிகளின் நிலை என்ன? சுப்ரீம் கோர்ட் கேள்வி

    வசிக்க வீடு இல்லாததால் ஆதார் அட்டை பெற முடியாத நடைபாதை வாசிகளின் நிலை என்ன? என உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. #Aadhaarcards #upgovt
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடியிருக்க வீடுகளின்றி நடைபாதைகளில் வசித்து வருபவர்களுக்கு அரசின் சார்பில் இரவுநேர காப்பகங்கள் அமைத்து தர உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி மதன் பீம்ராவ் லோகுர் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    இவ்விவகாரம் தொடர்பாக தங்களது கருத்தை பதிவுசெய்த நீதிபதிகள், முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத நடைபாதை வாசிகளின் நிலை என்ன? என்ற கேள்வியை மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் முன்வைத்தனர்.

    இந்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் இதுவரை 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வீடில்லாதவர்கள், கைவிடப்பட்டவர்களின் நிலை என்ன? முகவரி இல்லாவிட்டால் அவர்களால் எப்படி ஆதார் அட்டைகளை பெற முடியும்? இந்திய அரசின் பார்வையில் அவர்கள் இல்லாத நபர்களா? என்பதை மாநில அரசின் தலைமை செயலாளர் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். #tamilnews #Aadhaarcards
    Next Story
    ×