search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் நலமுடன் வீடு திரும்பினார் - சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்
    X

    கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் நலமுடன் வீடு திரும்பினார் - சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்

    சிகாகோவில் கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    ஐதராபாத்:

    சிகாகோவில் கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருபவர் சையத் பகர் உசேன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 30-ம் தேதி அங்குள்ள கடைக்கு சென்ற உசேனை, அந்த கடை உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டார். இதில் இரண்டு குண்டுகள் பாய்ந்து உசேன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    இதற்கிடையே, தனது தந்தையின் உடல் நிலை குறித்து தகவலறிந்த உசேன் மகன், இதுகுறித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தகவல் கொடுத்து, உதவும்படி கேட்டுக் கொண்டார். சுஷ்மா அறிவுறுத்தலபடி இந்திய தூதரக அதிகாரிகள் செயல்பட்டு உசேனுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசேன் இன்று நலமுடன் வீடு திரும்பினார். இதையறிந்த அவரது மகன், தனது தந்தை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அமெரிக்க அரசை வலியுறுத்த  வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
    Next Story
    ×