search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பனிமூட்டம்: இன்று 18 ரெயில்கள் ரத்து - 62 ரெயில்கள் தாமதம்
    X

    டெல்லியில் பனிமூட்டம்: இன்று 18 ரெயில்கள் ரத்து - 62 ரெயில்கள் தாமதம்

    டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லியில் இன்று 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 62 ரெயில்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Delhi #DelhiFog
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பனிமூட்டத்துடன் கடுங்குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனி மூட்டம், போக்குவரத்து சேவையை வெகுவாக பாதித்துள்ளது. தினமும் ரெயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



    பனிமூட்டம் காரணமாக, இன்று டெல்லிக்கு வரும் 62 ரெயில்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ரெயில்களின்  நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் டெல்லியில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குளிர்காலத்தில் பனி மூட்டம் காரணமாக ரெயில்வே சிக்னல்களை என்ஜின் டிரைவர்களால் பார்க்க முடிவதில்லை. இதனால் பாதுகாப்பு கருதி ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்படுகின்றன. எனவே, ரெயில் டிரைவர்களுக்கு உதவும் வகையில் ரெயில்வே சிக்னல்களை கண்காணித்து தகவல் அளிக்கும் சாதனங்கள் என்ஜின்களில் பொருத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டடது. இதன்மூலம் பனி மூட்டம் இருந்தாலும், உரிய நேரத்தில் ரெயில்களை இயக்க முடியும் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்திருந்தார். 

    இந்த குளிர்காலத்தில் மிக அதிக அளவாக டெல்லியில் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவியது. இன்று அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Delhi #DelhiFog #tamilnews

    Next Story
    ×