search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்தது - மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
    X

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்தது - மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் மக்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. #LokSabha #adjourned #sinedie
    புதுடெல்லி:

    குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 2017-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-12-2017 அன்று தொடங்கியது. 

    முன்னதாக, குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை பாகிஸ்தானுடன் தொடர்புப்படுத்தி பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையின் நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

    பின்னர், இவ்விவகாரத்தில் எதிர்கட்சிகளின் ஆவேசம் தணிந்த பிறகு நிதி தீர்வு மற்றும் பாதுகாப்பு மசோதா, முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

    பீமா கோரேகா நினைவு தினத்தன்று சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், மொத்தம் 13 நாட்கள் நடைபெற்ற மக்களவையின் குளிர்கால கூட்டத் தொடரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்தி வைத்தார்.

    மொத்தம் 61 மணி நேரம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 78 சதவீதம் ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்றுள்ளன. முத்தலாக் உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabha #adjourned #sinedie #tamilnews
    Next Story
    ×