search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக்கும் விவகாரம்: சுஷ்மா - சசிதரூர் இடையே கடும் வாதம்
    X

    ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக்கும் விவகாரம்: சுஷ்மா - சசிதரூர் இடையே கடும் வாதம்

    இந்தியை ஐ.நா. சபையில் அலுவல் மொழியாக்கும் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா மற்றும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் இடையே கடும் வாதம் ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்தியை ஐ.நா. சபையில் அலுவல் மொழியாக ஆக்க 193 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 129 நாடுகளின் ஆதரவு தேவையாகும். கடந்த 2015-ல் 129 நாடுகளின் ஆதரவைத் திரட்ட இந்தியா முயற்சித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் பேசியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக அறிவிப்பதை ஏற்க மறுக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். இது, பாரபட்சமான செயல். அநீதியான செயல்.

    இந்தியாவின் பன்மைத் தன்மையை, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற தனித்துவத்தை அழித்துவிடும் ஆபத்து இதில் இருக்கிறது என திமுக தலைவர் கருணாநிதி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

    இப்போது மத்திய அரசு இந்நகர்வுக்கு மக்களவையில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதிர்ப்பை சந்தித்து உள்ளது. ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக்கும் திட்டம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஐ.நா. சபையின் விதிகளின்படி, இந்தியை அலுவல் மொழியாக்க 129 நாடுகளின் ஆதரவு அவசியமானது. இந்தியை அலுவல் மொழியாக்குவதற்கு தேவையான செலவை உறுப்பு நாடுகள் ஏற்க வேண்டும். ஐ.நா. சபையில் மெஜாரிட்டியை பெறுவதற்கு 129 நாடுகளின் ஆதரவை பெறுவது கடிமான பணி கிடையாது.

    இதில் பிரச்சனை செலவை எதிர்க்கொள்வதிலே உள்ளது. செலவை ஏற்கும் விவகாரம் காரணமாக சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன, இதனால் இந்தி மொழியை அலுவல் மொழியாக்குவதில் இடையூறு காணப்படுகிறது என்றார்.

    பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் பேசுகையில் ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக்கும் திட்டத்திற்கு இந்தியா ரூ. 40 கோடி செலவு செய்ய வேண்டும் என்றார். அதற்கு சுஷ்மா சுவராஜ் பதில் அளிக்கையில், இந்திய அரசு இதற்காக ரூ. 400 கோடி கூட செலவு செய்ய தயாராக உள்ளது. ஆனால் ஐ.நா. சபை அதனை ஏற்றுக் கொள்ளாது என்றார். 


    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சசிதரூர், இந்தியை ஐ.நா. சபையில் அலுவலம் மொழியாக்க வேண்டும் என்பதில் அரசு காட்டும் முக்கியத்துவம் தொடர்பாக கேள்வியை எழுப்பினார். இந்தி இந்தியாவின் அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது. நாளை தமிழகம் அல்லது மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனால், அவர்களை ஏன் ஐ.நா.வில் இந்தியில் பேசுவதற்கு கட்டாயப்படுத்த வேண்டும். இந்தி இந்தியாவில் மட்டுமே அரசு அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது என்றார். 

    சுஷ்மா சுவராஜ் பதிலளிக்கையில், பிஜி நாட்டில் இந்தி அலுவல் மொழியாக உள்ளது மற்றும் மொரிஷியஸ், சுரிநாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் பலநாடுகளில் இந்தி பேசப்படுகிறது என்பது சசிதரூருக்கு தெரியவில்லை போல என்றார். 
    Next Story
    ×