search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடும் பனிமூட்டம்: ரெயில், விமான சேவை பாதிப்பு - டெல்லி ஏர்போர்ட் செயல்பாடுகள் நிறுத்தி வைப்பு
    X

    கடும் பனிமூட்டம்: ரெயில், விமான சேவை பாதிப்பு - டெல்லி ஏர்போர்ட் செயல்பாடுகள் நிறுத்தி வைப்பு

    டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பொழுதுவிடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

    டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று அதிகபட்ச பனிமூட்டம் காணப்படுகிறது. சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பார்வை தெரியாத வகையில் பனிமூட்டம் இருந்ததால் ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டது. 5 உள்நாட்டு விமானங்களும், 7 சர்வதேச விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது. விமான நிலைய செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

    இதேபோல் டெல்லியில் ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லிக்கு வரும் 56 ரெயில்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ரெயில்களின்  நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



    டெல்லி நகரில் இந்த சீசனில் மிக அதிக அளவிலான பனிமூட்டம் நேற்று காணப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் இருந்து செல்லும் மற்றும் டெல்லிக்கு வரும் சுமார் 220 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×