search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் - சிவசேனா
    X

    2019 நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் - சிவசேனா

    குஜராத் தேர்தலில் தோற்றாலும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய உத்வேகத்துடன் மீண்டு வருவார் என சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
    மும்பை:

    குஜராத் தேர்தலில் தோற்றாலும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய உத்வேகத்துடன் மீண்டும் வருவார் என சிவசேனா பாராட்டியுள்ளது.

    குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. கூறியிருந்தது. ஆனால், 100 இடங்களில் வெற்றி பெறுவது கூட கடினமான இலக்கு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. குஜராத்தில் 99 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. ராகுல்காந்தி - ஹர்திக் பட்டேல் அணி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.



    இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரதமர் மோடிக்கும் ராகுல்காந்திக்கும் இடையே நடைபெற்ற போட்டி என சிவசேனா கட்சியி்ன் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

    தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவினாலும் பா.ஜ.க. தோல்வி பயத்தில் அரண்டு போக வைத்த ராகுலின் பிரச்சாரம் பாராட்டிற்குரியது என சிவசேனா பாராட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் அக்கட்சியை தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என கூறியுள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×