search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.: பூலான் தேவியால் பிரபலம் அடைந்த சிகந்திரா இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி
    X

    உ.பி.: பூலான் தேவியால் பிரபலம் அடைந்த சிகந்திரா இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி

    பூலான் தேவியை கற்பழித்த சம்பவத்துக்கு பழிவாங்க 21 பேர் கொல்லப்பட்ட உத்தரப்பிரதேசம் மாநிலம், சிகந்திரா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்த பூலான் தேவி கடந்த 1983-ம் ஆண்டு போலீசில் சரண் அடைந்து சிறைக்கு சென்றார். தண்டனை காலம் முடிந்து விடுதலையான இவர் 1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த 25-7-2011 அன்று டெல்லியில் உள்ள வீட்டில் மர்மநபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, பூலான் தேவியை கற்பழித்த ராஜபுத்திர இனத்தை சேர்ந்த 21 பேர் கொண்ட கும்பலை 1981-ம் ஆண்டில் தனது கூட்டாளிகள் துணையுடன் கான்பூர் தெஹத் மாவட்டத்தில் சுட்டுக் கொன்றார்.



    இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட சிகந்திரா சட்டசபை தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களான 3.21 லட்சம் பேரில் 53 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வேட்பாளர் அஜித் சிங் பால் 73,284 (44.86 சதவீதம்) வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். 

    அவருக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சீமா சச்சன் 61,423 வாக்குகள் (37.60 சதவீதம்) பெற்றிருந்த நிலையில் 11,861 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் சிங் பால் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×