search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரத் தயார்: நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவிப்பு
    X

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரத் தயார்: நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவிப்பு

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகவே இருப்பதாக நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி மேல்-சபையில் நேற்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் தேவேந்தர் கவுட் ஆகியோர், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. எனவே பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வளையத்துக்குள் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது பற்றி எதிர்க்கட்சிகளைப் போலவே மத்திய அரசும் கவலை கொண்டுள்ளது. அதனால்தான் பெட்ரோல், டீசல் மீதான மத்திய வரிகள் குறைக்கப்பட்டது. இதை பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி உள்ளன. ஆனால் காங்கிரஸ் மாநில அரசுகள் இதைச் செய்யவில்லை.

    அதே நேரம் பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. இதுபற்றி அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளும் கேட்டறியப்பட்டு அதன்பிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×