search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வெற்றியால் மோடியின் சர்வாதிகார போக்கு மேலும் அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்டு கருத்து
    X

    தேர்தல் வெற்றியால் மோடியின் சர்வாதிகார போக்கு மேலும் அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்டு கருத்து

    குஜராத், இமாசலபிரதேச தேர்தல்களில் பா.ஜனதாவின் வெற்றியால் பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கு மேலும் அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இதுதொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறியதாவது:-

    குஜராத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ள போதிலும் காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை மதசார்பற்ற சக்திகள் வெல்ல முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    மதசார்பற்ற சக்திகள் மேலும் வலிமையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்படுவது அவசியமானது. 2 மாநில தேர்தல் வெற்றி மூலம் பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கு மேலும் அதிகரிக்கும். ஆனால் இது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. பா.ஜனதாவும் தனது இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த முயலும். இவ்வாறு அவர் கூறினார்.

    சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவூத் கூறியதாவது:-



    குஜராதில் பா.ஜனதா 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. எனவே மீண்டும் ஆட்சியை பிடிப்பது ஒன்றும் பெரிய வி‌ஷயம் இல்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடித்து இருக்கலாம்.

    ஆனால் உண்மையான வெற்றி காங்கிரசுக்கு தான். இந்ததேர்தலில் தோற்ற போதிலும் பா.ஜனதாவை அக்கட்சி தோற்கடித்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியின் திறமை வாய்ந்த தலைமையே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரி கமல்நாத் கூறும்போது ‘‘குஜராத் தேர்தலில் பா.ஜனதாவின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது ராகுல்காந்தியின் அரசியல் சகாப்தத்தின் தொடக்கம் ஆகும்’’ என்றார்.

    ரேணுகா சவுத்ரி கூறும்போது ‘‘குஜராத்தில் காங்கிரஸ் சிறப்பான முறையில் வெற்றிகளை பெற்றுள்ளது. எங்கள் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இதற்கு ராகுல் காந்தியின் பங்களிப்புதான் காரணம்’’ என்றார்.
    Next Story
    ×