search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் தேர்தல்: முதல் மந்திரி விஜய் ருபானி 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
    X

    குஜராத் தேர்தல்: முதல் மந்திரி விஜய் ருபானி 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

    குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி விஜய் ருபானி 39,980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் 12,474 வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 84 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 61 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி 99,165 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இந்திரானில் ராஜகுரு 59,635 வாக்குகளும் பெற்றனர். விஜய் ருபானி 39,980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இதேபோல், மெஹ்சானா தொகுதியில் போட்டியிட்ட துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் 68,785 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிவாபாய் பட்டேல் 56,311 வாக்குகளும் பெற்றனர். 12,474 வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.

    Next Story
    ×