search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவு காட்டுகிறது: சிவசேனா எம்.பி. கருத்து
    X

    மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவு காட்டுகிறது: சிவசேனா எம்.பி. கருத்து

    பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய ரவுட் குறிப்பிட்டுள்ளார்.
    மும்பை:

    பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய ரவுட் குறிப்பிட்டுள்ளார்.

    குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 1.15 நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 94 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 71 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய ரவுட் குறிப்பிட்டுள்ளார்.

    ‘குஜராத்தின் வளர்ச்சி மாதிரி’ என்ற வாய் சவடாலை  வைத்துதான் பா.ஜ.க. மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால், குஜராத் மக்கள் இன்று பா.ஜ.க.வுடன் மகிழ்ச்சியாக இல்லை என்பதை வைத்து பார்க்கும்போது நாட்டில் உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    குஜராத் மக்களின் மனநிலையை பா.ஜ.க. புரிந்துகொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாததற்கு காரணம் என்ன? என்பதை கண்டறிய வேண்டும். 

    நாட்டின் பாதுகாப்பு, காஷ்மீர் - பாகிஸ்தான் விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் மோடி தலைமையிலான அரசு ஒரே ஒரு வெற்றிகரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத் தேர்தல் முடிவுகள் இதையே காட்டுகிறது.

    மீண்டும் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. ஆனால், முன்னர் பா.ஜ.க.வை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற குஜராத் மக்களின் முந்தைய மகிழ்ச்சியான மனநிலை தற்போது அவர்களுக்கு இல்லை’ என சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×