search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் நிதி தீர்வு மசோதாவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு - அருண் ஜெட்லிக்கு கடிதம்
    X

    மத்திய அரசின் நிதி தீர்வு மசோதாவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு - அருண் ஜெட்லிக்கு கடிதம்

    மத்திய அரசின் நிதி தீர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    கொல்கத்தா:

    வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் திவால் ஆவதை தடுக்கும் நோக்கில், ‘நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீட்டு மசோதா’ (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் இருக்கும் இந்த மசோதாவில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், இந்த மசோதாவை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக எதிர்ப்பது என திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த கடுமையான மசோதாவை திரும்ப பெறுமாறு அந்த கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மக்களின் சேமிப்பு பணம் வங்கிகளின் பங்குகளாக வலுக்கட்டாயமாக மாற்றப்படும் என்பது உள்ளிட்ட 4 அம்சங்களில் இந்த மசோதா மக்களை பாதிக்கும் என அந்த கடிதத்தில் கூறியுள்ள மம்தா பானர்ஜி, இந்த மசோதாவால் சாதாரண மக்கள் கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். 
    Next Story
    ×