search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கர்: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் பெற்ற மலைக்கிராமம் - மோடி பாராட்டு
    X

    சத்தீஸ்கர்: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் பெற்ற மலைக்கிராமம் - மோடி பாராட்டு

    சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு மலைக்கிராமம் மின்சார வசதி பெற்றுள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த முதல் மந்திரி ராமன் சிங்குக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு மலைக்கிராமம் மின்சார வசதி பெற்றுள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த முதல் மந்திரி ராமன் சிங்குக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தினர், கடந்த 70 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். ஆனால், தற்போது அந்த மலைக்கிராமத்துக்கு மாநில அரசு மேற்கொண்ட முயற்சியால் மின்சார வசதி கிடைத்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:



    சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜோகாபாத் என்ற மலைக்கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் பசுமையான காடுகள் சூழ்ந்துள்ளன.

    இந்த கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லை. அந்த கிராம மக்களும் மின்சார வசதி இல்லாமல் கழித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், மாநில அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் இந்த கிராமத்திற்கு சமீபத்தில் முதல் முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தெருக்கள், வீடுகளில் மின்சார விளக்குகள் எரிவதை கண்ட கிராமத்தினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மின்சாரம் கிடைத்தது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், இப்போதுதான் எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களது குழந்தைகள் இனிமேல் எந்த சிரமமும் இன்றி படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே, 70 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தின் மலைக்கிராமத்துக்கு மின்சாரம் கிடைத்துள்ளது பற்றி அறிந்த பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், மலைக் கிராமத்தினருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அந்த கிராம மக்களின் வாழ்வு பிரகாசமாக ஒளிரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×