search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைசூரு அரண்மனையை சைக்கிள் மூலம் சுற்றிப் பார்க்க அனுமதி
    X

    மைசூரு அரண்மனையை சைக்கிள் மூலம் சுற்றிப் பார்க்க அனுமதி

    கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை வளாகத்தில் சைக்கிளில் சென்று சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    19-ம் நூற்றாண்டில் (யதுவம்ச) உடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் மைசூரு நகரம் சிற்றரசாக இருந்து வந்தது. நரசராஜ உடையார் மற்றும் சிக்க தேவராய உடையார் ஆகிய அரசர்களின்கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.

    பின்னர், பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூருவும் விடுதலை பெற்றது. மைசூர் மன்னர்கள் ஆண்டகாலத்தில் அவர்களின் அரண்மனையாக இருந்த பிரமாண்ட மாளிகை மைசூரு நகரில் அமைந்துள்ளது.

    தசரா திருவிழா மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளின் மாலை வேளைகளில் ஒருமணி நேரமும் இந்த அரண்மனை மின்விளக்கின் அலங்காரத்தில் ஜொலிக்கும். இதை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனைக்கு வருவதுண்டு.



    இதுதவிர, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் மைசூரு அரண்மனையை கண்டு களிக்கின்றனர்.

    மிக பிரமாண்டமாக சுமார் 90 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் அமைந்துள்ள இந்த அரண்மனை வளாகத்தை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு பேட்டரிகளால் இயங்கும் கார் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் சைக்கிளில் சென்று சுற்றிப் பார்க்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்களுக்கு வாடகை ஏதுமில்லை. அம்பாவிலாஸ் நுழைவு வாயில் பகுதியில் அடையாள அட்டையை காண்பித்து 200 ரூபாய் முன்பணமாக செலுத்தி சைக்கிளை பெற்று செல்பவர்கள் மணிக்கணக்கில் அரண்மனையை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் முன்பணத்தை திரும்பப் பெற்று செல்கின்றனர்.

    முதல்கட்டமாக இந்த மாத கடைசிக்குள் 10 சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மைசூரு அரண்மனை இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×