search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரிய பாண்டியன் வழக்கில் திடீர் திருப்பம்: இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது எப்.ஐ.ஆர்
    X

    பெரிய பாண்டியன் வழக்கில் திடீர் திருப்பம்: இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது எப்.ஐ.ஆர்

    சென்னை இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட விவாகரத்தில் உடன் சென்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீஸ் தனிப்படை ராஜஸ்தான் சென்றது. பாலி மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி கொள்ளையர்களை பிடிக்கும் போது கொள்ளையர்கள் தனிப்படை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது.

    அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனிப்படையில் இருந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வைத்திருந்த துப்பாக்கி குண்டு தான் பெரிய பாண்டியன் உடலில் இருந்ததாக பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

    சம்பவ இடத்தில் சென்னை காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார் விசாரணை நடத்தி இருந்தார். இதனையடுத்து, முனிசேகர் மற்றும் தனிப்படையில் இருந்த மற்ற இரு போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், முனிசேகர் மீது 104 ஏ பிரிவின் கீழ் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனிசேகர் தான் பெரிய பாண்டியனை தவறுதலாக சுட்டார் என்று எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    Next Story
    ×