search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் பாதுகாப்புக்காக ரெயில்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா - ரெயில்வே பரிசீலனை
    X

    பெண்கள் பாதுகாப்புக்காக ரெயில்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா - ரெயில்வே பரிசீலனை

    பெண்களுக்கு ரெயில்களில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த பரிசீலினை செய்வதாக ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரெயில் பெட்டிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுத்து வருவதாக ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2012-ல் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது நிறைந்த மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் தாக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டார். அவருக்கு அளித்த சிகிச்சை எதுவும் பயன் தராததால் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு பின் அந்த மாணவி நிர்பயா (அச்சமற்றவர்) என அறியப்பட்டார்.



    இதையடுத்து, மத்திய அரசு நிர்பயா நிதி என்ற பெயரில் நிதியை ஒதுக்கீடு செய்து 900 ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக, ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தை எதிர்கொள்ளும் வகையில் இரு விஷயங்களில் மிக முக்கியமாக கவனம் செலுத்த உள்ளோம்.

    முதலில், அனைத்து ரெயில்களிலும் வைபை இணைப்பு கிடைப்பதை உறுதி செய்வோம். இரண்டாவதாக, அனைத்து ரெயில்வே நிலையங்கள் மற்றும் நீண்ட தொலைவு செல்லும் ரெயில்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த உள்ளோம்.

    வரும் 2018-ம் ஆண்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள், குறிப்பிடும்படியாக, மனித கடத்தலுக்கு எதிராக இணைந்து போராடும் ஆண்டாக நாங்கள் அர்ப்பணித்து செயல்படுவோம்.  இதனை அனைத்து ரெயில்வே பிரிவுகளிலும் நாங்கள் மேற்கொள்வோம். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×