search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019- பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டி
    X

    2019- பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டி

    2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடுவார் என அவரது மகள் பிரியங்கா வதேரா இன்று தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் தேர்தலை நடத்திய குழுவின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சான்றிதழை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் முக்கிய உயர்மட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை வாழ்த்தி சோனியா காந்தி பேசினார்.

    ராகுலிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைத்து விட்டதால் முழுநேர அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெறுவார். 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சோனியா தற்போது எம்.பி.யாக பதவி வகிக்கும் ரேபரேலி தொகுதியில் அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என இதற்கு முன்னரும், இன்றும் தகவல்கள் வெளியாகின.



    இந்நிலையில், 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் நான் போட்டியிடப் போவதில்லை. சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவார் என அவரது மகள் பிரியங்கா வதேரா இன்று தெரிவித்துள்ளார்.

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களாக ராகுல் காந்தி (அமேதி), சோனியா காந்தி (ரேபரேலி) ஆகிய இருவர் மட்டுமே பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×