search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கிய 1½ ஆண்டில் தமிழக தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் கைது
    X

    செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கிய 1½ ஆண்டில் தமிழக தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் கைது

    ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கிய ஒன்றை ஆண்டில் இதுவரை 10ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடைபெற்று வரும் செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவை தொடங்கியது.

    இதற்காக திருப்பதியில் உள்ள செம்மரக் கிடங்குக்கு அருகில் செம்மரக் கடத்தல் தடுப்பு அலுவலகம் திறக்கப்பட்டது. ஆந்திராவில் எங்கு செம்மரக் கடத்தல் நடந்தாலும் திருப்பதியைத் தலைமையிடமாக கொண்டு இங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடங்கியதிலிருந்து இதுவரை செம்மரத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் என 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து இவர்களை கைது செய்துள்ளது.

    இவர்கள் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, நாமக்கல், காஞ்சிபுரம், திருச்சி, புதுச்சேரி கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள ஜவ்வாதுமலை பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் செம்மரம் வெட்ட அதிக அளவில் வருகின்றனர். போலீசாரிடம் ஒருமுறை பிடிப்பட்டு வெளியில் வந்தாலும் மீண்டும் அவர்கள் செம்மரம் வெட்ட வருகின்றனர்.

    அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த அவர்களின் விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துக்குள் செம்மரம் வெட்டவரும் செம்மரத் தொழிலாளர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் விவரங்களை சேகரிக்க, பிங்கர் பிரிண்ட் ஐடண்டிபிகே‌ஷன் நெட்வொர்க் சிஸ்டம் என்ற மென்பொருள் பயன் படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் பிடிபடும் கடத்தல்காரர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அவர்களின் கைரேகையுடன் ஆதார் என்ணும் இணைக்கப்படும். அதனால் அவர்கள் பொய்யான பெயர் முகவரியை இனி கூற முடியாது.

    ஒருமுறை பிடிபட்டு விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் 2-வது முறை பிடிப்பட்டால் அவர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்படும். இதுவரை1300 செம்மரக் தொழிலார்கள் மற்றும் கடத்தல்காரர்களின் கை விரல் ரேகை முலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் 5 ஆயிரம் பேரின் விவரங்கள் இதில் பதிவு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×