search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிசோரம்: ரூ.1302 கோடி மதிப்பிலான மின்சார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    X

    மிசோரம்: ரூ.1302 கோடி மதிப்பிலான மின்சார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    மிசோரம் மாநிலத்தில் சுமார் 1302 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துய்ரியால் புனல் நீர் மின்சார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    அய்சால்:

    பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளார். முதலாவதாக மிசோரம் மாநிலத்திற்கு வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் முலம் அய்சால் விமான நிலையம் வந்தடைந்தார்.



    அதைத்தொடர்ந்து மிசோரமின் அய்சால் நகரில் சுமார் 1302 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 60 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட துய்ரியால் புனல் நீர் மின்சார திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் அசாம் ரைபில்ஸ் படை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று இந்த அழகிய மாநிலத்திற்கு நான் வந்ததன் மூலம், மிசோரமின் மக்களுடன் செலவழித்த இனிய நேரங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. உங்கள் பிரச்சனைகளை குறித்து தெரியப்படுத்த நீங்கள் டெல்லிக்கு வரவேண்டாம். அதற்கு பதிலாக டெல்லியில் இருந்து அதிகாரிகள் இங்கு வருவார்கள். அவர்களுக்கு வடகிழக்கு பிராந்திய முன்னேற்ற அமைச்சகம் என பெயரிட்டுள்ளோம்.

    துய்ரியால் புனல் நீர் மின்சார திட்டம்தான் மத்திய அரசின் மூலம் மிசோரத்தில் நிறைவேற்றப்படும் முக்கிய திட்டமாகும். இத்திட்டம் திரு. வாஜ்பாய் அவர்கள் பிரதமாரக இருந்தபோது 1998-ம் ஆண்டு வடகிழக்கு மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கத்தை நாங்கள் முன்னெடுத்து வருவதோடு, வடகிழக்கு பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கான வளங்களை அர்ப்பணித்து வருகிறோம். எனது அமச்சரவையில் உள்ள மந்திரிகள் அடிக்கடி வடகிழக்கு பிராந்தியத்துக்கு வந்து செல்கின்றனர்.

    இந்தியாவின் இளைஞர்களின் திறமைகளையும், 'தொழில் மூலம் அதிகாரம்' என்னும் கொள்கையையும் நம்புகிறோம். இது புதுமைக்கான சரியான சுற்றுச்சூழலையும், தொழிற்துறை வளர்ச்சியையும் உருவாக்குகிறது. 2022-க்குள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் பயன்களை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பது ஆகிய இரட்டை இலக்குகளை நோக்கி உழைப்பதை பொருத்து உள்ளது’’ என்றார்.



    பின்னர் மேகாலயா செல்லும் மோடி அங்கு சாலை மேம்பாட்டு திட்டங்களை துவக்கி வைக்கிறார். திரிபுரா, மற்றும் நாகாலாந்து ஆகிய மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி மோடியின் வடகிழக்கு மாநில பயணம் தேர்தல் பிரசார முன்னோட்டமாக இருக்கும் என வடகிழக்கு மாநிலங்களின் பா.ஜ.வினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×