search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 மாநிலங்களில் பட்டாசுக்கு தடை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
    X

    3 மாநிலங்களில் பட்டாசுக்கு தடை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

    பஞ்சாப், அரியானா, சண்டிகரில் பட்டாசுகள் வெடிக்க ஐகோர்ட்டு விதித்த தடையை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்து உள்ளனர்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், வெடிக்கவும் தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு இந்த மாதத்தின் தொடக்கத்தில் விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு குறித்து 4 வாரங்களில் விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும், சண்டிகார் யூனியன் பிரதேசத்திலும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அங்குள்ள ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

    இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மேல்முறையீடு, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும், சண்டிகார் யூனியன் பிரதேசத்திலும் பட்டாசுகளை வெடிக்க ஐகோர்ட்டு விதித்த தடையை அகற்ற மறுத்து விட்டனர்.

    மேலும், இந்த மேல்முறையீட்டு வழக்கை அடுத்த மாதம் 5-ந் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
    Next Story
    ×