search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை சினிமா படமாகிறது
    X

    சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை சினிமா படமாகிறது

    மராத்தி மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடத்திய சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது.
    மும்பை:

    மராட்டியத்தில் சிவசேனா கட்சியை தொடங்கி செல்வாக்குடன் இருந்தவர் பால்தாக்கரே. மராத்தி பேசும் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்தி பிரபலமானவர். பால்தாக்கரே 2012-ல் தனது 86-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.

    இந்த படத்தை சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தயாரிக்கிறார். பால்தாக்கரேயின் சிறுவயது வாழ்க்கை, சிவசேனா கட்சியை தொடங்கியது, மராட்டியத்தில் அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் இந்த படத்தில் இடம் பெறுகின்றன. இதில் பால்தாக்கரே கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் நசுருதீன் சித்திக் நடிப்பார் என்று தெரிகிறது.

    படம் குறித்து சஞ்சய் ராவத் எம்.பி கூறும்போது, “பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்றை எனது சொந்த செலவில் படமாக தயாரிக்கிறேன். நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. 21-ந்தேதி இந்த படத்தின் தொடக்க விழா நடக்கிறது. இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பெரும்பகுதி காட்சிகளை மும்பையிலேயே படமாக்க திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.
    Next Story
    ×