search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹரித்துவார், ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி
    X

    ஹரித்துவார், ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி

    ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் கங்கை போன்ற நதிகள் மாசுடைகின்றன. மாசு அடைவதை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள அனைத்து நகரங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வெளியிட்டது.

    அதன்படி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரிலிருந்து உத்தர்காசி மாவட்டம் வரை பிளாஸ்டிக் பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமித்து வைக்க கூட தடைவிதித்துள்ளது. மீறுவோருக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

    சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேக்தா தொடர்ந்த வழக்கில், பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
    Next Story
    ×