search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘அமர்நாத் கோவிலை அமைதி மண்டலமாக அறிவிக்கவில்லை’ - தேசிய பசுமை தீர்ப்பாயம் விளக்கம்
    X

    ‘அமர்நாத் கோவிலை அமைதி மண்டலமாக அறிவிக்கவில்லை’ - தேசிய பசுமை தீர்ப்பாயம் விளக்கம்

    அமர்நாத் குகை கோவிலை அமைதி மண்டலமாக அறிவிக்கவில்லை என்றும், பனிலிங்கத்தின் முன்னால் மட்டும் அமைதியை பராமரிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவில் இந்துக்களின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடை காலத்தின் சில நாட்கள் தவிர ஆண்டின் பெரும்பாலான நாட்களில் பனியால் சூழப்பட்டு இருக்கும் இந்த கோவிலில், பனிக்கட்டியில் உருவாகும் சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.



    இந்த கோவிலின் இயற்கை அழகை காக்கவும், பனிச்சரிவை தடுப்பதற்காகவும் அமர்நாத் கோவில் வளாகத்தை அமைதி மண்டலமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று முன் தினம் அறிவித்தது. அதன்படி கோவிலின் நுழைவு வாயிலுக்கு அப்பால் வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    இதற்கு இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக இந்த அறிவிப்பை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டங்களில் இறங்கினர்.

    இதைத்தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அமர்நாத் குகை கோவிலை அமைதி மண்டலமாக அறிவிக்கவில்லை என்றும், பனிலிங்கத்தின் முன்னால் மட்டும் அமைதியை பராமரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஸ்வாதந்தர் குமார் தலைமையிலான அமர்வு அறிவித்து உள்ளது.

    அமர்நாத் குகை கோவிலில் மந்திரங்கள் சொல்வதற்கோ பஜனை பாடல்கள் பாடுவதற்கோ தடை இல்லை என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது. 
    Next Story
    ×