search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளின் அவல நிலை: டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 23-ல் ஹசாரே உரையாற்றுகிறார்
    X

    விவசாயிகளின் அவல நிலை: டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 23-ல் ஹசாரே உரையாற்றுகிறார்

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வரும் ஜனவரி 23-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விவசாயிகளின் அவல நிலை மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பேச உள்ளார்.
    புலந்த்ஷர்:

    ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இப்போது விவசாயிகள் பிரச்சினை மற்றும் நாட்டின் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கோரிக்கையை கையில் எடுத்துள்ளார். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23-ல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தும் போராட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். 

    முன்னதாக ராம்லீலா மைதானத்தில் ஜனவரி மாதம் 23-ம்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக ஹசாரே இன்று அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஜனவரி மாதம் 23-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளின் அவல நிலை மற்றும் தேர்தல் முறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பேச உள்ளேன். 

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும், லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்த முடியவில்லை. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெறவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி சாதாரண மனிதனுக்கு ஒன்றும் செய்யவில்லை. நாட்டின் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது.” என்றார்.
    Next Story
    ×