search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்ட்: உத்தர்காசி-சீன எல்லையில் உள்ள கிராமங்களை இணைக்கும் பாலம் உடைந்தது
    X

    உத்தரகாண்ட்: உத்தர்காசி-சீன எல்லையில் உள்ள கிராமங்களை இணைக்கும் பாலம் உடைந்தது

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தர்காசி மாவட்டம் மற்றும் சீன எல்லையில் உள்ள கிராமங்களை இணைக்கும் பாலம் இடிந்ததால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி பாலம் இன்று காலை உடைந்து விழுந்தது. பாலத்தின் மீது இரண்டு லாரிகள் ஒரே நேரத்தில் சென்றதால், எடை தாங்க முடியாமல் பாலம் உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த பாலம் உத்தர்காசி மாவட்டத்தையும், சீன எல்லையில் உள்ள கிராமங்களையும் இணைக்கிறது. அக்கிராமங்களை சேர்ந்த மக்கள் உத்தர்காசிக்கு செல்ல இந்த ஒரு பாலம் மட்டுமே உள்ளது.



    இந்நிலையில் பாலம் இடிந்து விழுந்தததால் அந்த கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நிற்கின்றன.

    பாலத்தில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு லாரி தான் செல்ல வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், இரண்டு லாரிகள் சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் மாற்று பாதை அமைத்துத் தரப்படும் என எல்லை பாதை அமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
    Next Story
    ×