search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் ஆச்சரியம் தரும் தேர்தல் முடிவுகள் இருக்கும்: ராகுல் காந்தி
    X

    குஜராத்தில் ஆச்சரியம் தரும் தேர்தல் முடிவுகள் இருக்கும்: ராகுல் காந்தி

    குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மக்களோடு ஒருங்கிணைந்து நடத்திய பிரசாரத்தால் அங்கு யார் வெற்றி பெறுவார்கள்? என்பதில் ஆச்சரியம் தரும் முடிவுகள் இருக்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சியாக நேற்று டெல்லியில் மகிளா காங்கிரஸ் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:-

    குஜராத் தேர்தலில் காங்கிரசின் பிரசார பணி மிக சிறப்பாக இருந்தது. அங்கு மக்களோடு இணைந்து காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவுக்கு எதிரான போரை நடத்தியது.

    நமது கட்சியினர் மக்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் இவை எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது.

    குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மக்களோடு ஒருங்கிணைந்து நடத்திய பிரசாரத்தால் அங்கு யார் வெற்றி பெறுவார்கள்? என்பதில் ஆச்சரியம் தரும் முடிவுகள் இருக்கும். ஓட்டு வித்தியாசங்களும் ஆச்சரியத்தை அளிக்கும்.

    ஒரு மாநிலத்தில் எப்படி தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்பதற்கு குஜராத்தில் காங்கிரஸ் செய்த பணிகள் உதாரணமாக அமைந்துள்ளது.



    இதே பணிகளை மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும். மக்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து ஒற்றுமையாக நன்கு திட்டமிட்டு தேர்தல் பணிகளை அனைத்து மாநிலங்களிலும் செய்ய வேண்டும்.

    தற்போது காங்கிரஸ் தலைவராக பெண் ஒருவர் இல்லாத நிலை உள்ளது. இதற்கு உரிய ஈடு செய்யப்படும். குறைந்தபட்சம் மாநிலங்களிலாவது பெண்களுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும்.

    கட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். சோனியாகாந்தி பெண்கள் முற்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்கு காங்கிரஸ் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

    அதே போல் ஜி.எஸ்.டி. வரியில் உரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும். நாம் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
    Next Story
    ×